2025 மே 15, வியாழக்கிழமை

கொடியேற்றம்

Sudharshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கோட்டைமுனை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமானது.

தொடர்ந்து எட்டு நாட்கள் திருவிழா நடைபெற்று ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை (22) பஞ்சரதபவனி இடம்பெறும். பங்குனி உத்தர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (23) காலை 6.00 மணிக்கு கல்லடிக் கடற்கரையில் நடைபெறும்.

கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (24) அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகமும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு விசேட அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

மஹோற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உலகவிக்னேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .