2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கல்குடா வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஞான விநாயகர் ஆலயத்துக்கு விநாயகர் விக்கிரகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து விநாயகர் விக்கிரகம் எடுத்துவரப்பட்டு அதற்கான பூசைகள் நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகருக்கான எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இப்பூசை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் ககலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .