2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் அபிராமிப்பட்டர் விழா

Freelancer   / 2025 ஜனவரி 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நாளை (29) அபிராமிப்பட்டர் விழா இடம்பெற உள்ளது.

அமாவாசை தினத்தை தனது பக்தியால் பௌர்ணமி தினமாக்கிய அபிராமிப்பட்டர் விழா நாளை, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற உள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி, மாலை 3.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற உள்ளன.

இதைத் தொடர்ந்து, அம்பாள் அபிராமிப்பட்டருடன், உள்வீதி வலம்வரும் அற்புதக்காட்சியும் நடைபெறும் என்று தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபை அறிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X