2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

துளசி - ஷாலகிராம் தெய்வீக திருமணம்

Freelancer   / 2024 நவம்பர் 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொட்டாஞ்சேனை  ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் இம்மாதம் 16ஆம் திகதி  சனிக்கிழமை துளசி-ஷாலகிராம் தெய்வீக திருமணம் பக்திபூர்வமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த தெய்வீகத் திருமணம் வாழ்க்கையில் திருமணம் தொடர்பான தடைகளை நீக்கும் என்று நம்பப்படுகிறது. 

புராணத்தின்படி விஷ்ணுவின் சிறந்த பக்தை விருந்தா. அவர் இறந்த பிறகு உடலை விட்டு வெளியேறிய இடத்தில் துளசிச்செடி வளர்ந்தது. 

விஷ்ணு விருந்தாவை ஆசிர்வதித்தார். அத்துடன் அவரது ஷாலகிராம்  வடிவம் விருந்தாவை திருமணம் செய்து கொள்வதாகவும் துளசி இல்லாமல் அவரது பூஜை முழுமையடையாது என்றும் கூறினார். 

இதன்படி துளசி-ஷாலகிராம் திருமணம் கார்த்திகை மாதம் நடந்தது என்பது என்பது ஐதீகம்.

அந்த வகையில் வருடாந்தம் கார்த்திகை மாதம் பக்தர்கள் துளசி-ஷாலகிராம்  திருமணத்தை நடத்தி இறை அருளைப் பெற்றுக்கொள்கின்றனர். 

திருமணத்திற்கு முன் முதல் நாள் மாலை விஷ்ணுவும் துளசி என்னும் இலக்சுமியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். இலக்சுமியை துளசியாகவும் கிருஷ்ணரை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பார்ப்பது ஐதிகம். 

அன்றைய தினம் விஷ்ணு கிருஷ்ணர் ஆகியோரின் சக்தி ஜலத்திலும் அக்னியிலும் இருப்பதாகவும் நம்புகின்றனர்.

பக்தர்கள் வருகை தந்து இந்த தெய்வீக திருமண வைபவத்தில் பங்குகொண்டு பகவான் திருவருளைப்பெற்றுய்யுமாறு ராதாகிருஷ்ண ஆலயம் அழைப்பு விடுக்கிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .