2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தீர்த்தோற்சவம்…

Editorial   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் வியாழக்கிழமை (11) காலை ஆலய முற்றலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய   திருவிழா தொடர்ந்து 10 நாட்கள்  இடம்பெற்றன. புதன்கிழமை(10) இரவு திருவேட்டைத்திருவிழா இடம்பெற்றத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை கலை மூல மூர்த்தியாகிய முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சிவன் உடன் உறை பார்வதி சமேதராய் இடபவாகனத்திலும், உள்வீதி, வெளி வீதி வலம் வந்து, வியாழக்கிழமை காலையில் சுபமுகுர்த்த வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.  (வ.சக்திவேல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X