Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
இந்துக்கள் அனுஷ்ட்டிக்கும் சிவ விரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதம், நாளை மறுதினம் (11) அதிகாலை ஆரம்பமாகின்றது. இவ்விரதத்தை, “ஆருத்திரா தரிசனம்” என்றும் அழைப்பர்.
நாளை தொடக்கம் 10 நாள்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். கோவில்களின் அதிகாலை திருவெம்பாவை சிறப்பு பூஜைகள் இடம்பெறும். இவ்விரதம் எதிர்வரும் 20ஆம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி அனைவரையும் துயிலெழுப்பி சிவபிரானுக்கு திருவெம்பாவை பாடுவது வழமை. அதேபோன்று, இந்துக்கள் வாழும் கிராமங்களில் பொதுவாக அதிகாலை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நடைபெறுவதும் வழமையாகும்.மேலும், சில கோவில்களில் திருவாசக முற்றோதல் இடம்பெறுவதும் வழக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .