Sudharshini / 2016 ஜூன் 12 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கூழாவடி புதுமைபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் செபமாலை வழிபாடுகள் மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றன.
நேற்று சனிக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அருட்தந்தை அ.நவரெட்னம் அடிகளாரின் தலைமையில், திருவிழா நற்கருணை ஆராதனை நடைபெற்றதுடன் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கூழாவடி புதுமைபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், புளியந்தீவு பங்குத்தந்தை இக்னேசியஸ் ஜோசப் அடிகளாரும் கலந்துகொண்டார். கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025