Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
சம்மாந்துறை தழிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை(04) காலை 9.00 மணியளவில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான இவ்வாலய உற்சவத்தையொட்டி,சனிக்கிழமை(10) வீரகம்பம் வெட்டலும் திங்கட்கிழமை(12) சக்தி பூசையும் மாலை நோற்புக்கட்டலும் செவ்வாய்க்கிழமை(13) காலை 7.30 மணிக்கு தீ மிதிப்பும் இடம்பெறும்.
செவ்வாய்க்கிழமை(20) மாலை வைரவர்,இடும்பன் பூசை நடைபெறும்.
உற்சவகால கிரியைகள் யாவும் சி.சதாசிவம் தலைமையில் நடைபெறும்.
38 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
09 Nov 2025