Administrator / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்
திருகோணமலை பாலையூற்று ஸ்ரீ ஹரிகர நவசக்தி நாகன்னி சித்தபீடத்தின் கீழ் செயற்படும் திருவடி நிழல் ஆன்மீக நிலைய தலைமையின் கீழ் இயங்கும் அறநெறிப்பாடசாலைக்கான நூல் நிலையமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.
இதன் ஸ்தாபகர், சிவயோகி நாகவரலக்ஷ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவரது தந்தையின் நினைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூலக கட்டடத்தை தந்தையின் 4 ஆவது சகோதரர் திறந்துவைத்தார். பெயர் பலகையை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி திரைநீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சிவயோகி நாகவரலக்ஷ்மியின் சேவையைப்பாராட்டி ஓய்வுநிலைக்கணக்காளர். முத்துநேசராஜா தம்பதியினர் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், சட்டத்தரணி கரிகாலன், வைத்தியர் ல.சசிகரன், மாவட்ட உதவிச்செயலாளர் ந.பிரதீபன், பிரதேச செயலாளர் அருள்ராஜ் உட்பட பலரும் வருகைதந்து பார்வையிட்டு கலந்துகொண்டனர். இங்கு, பெண் துறவிகள் தங்கும் நிலையம், அறநெறிப்பாடசாலை, நூலகம் என்பன சிறந்த முறையில் பண்பாட்டு செழுமையுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




19 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago