Freelancer / 2022 ஜூன் 11 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்தது.
கடந்த (04) ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த இப் பாதயாத்திரை இன்று முள்ளிவாய்க்கால் சித்திவிநாயகர் ஆலயத்தை அடைந்து, இன்றிரவு வட்டவாகல் சப்தகன்னிநகர் ஆலயத்தில் தங்கும்.
நாளை (12) ஞாயிற்றுக்கிழமை, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடையும் பாதயாத்திரை குழுவினர் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு நிறைவு பெறும் வரை 3 தினங்கள் தங்கியிருப்பார்கள்.
14ஆம் திகதி மீண்டும் பாதயாத்திரை ஊற்றங்கரை நோக்கி நகரும் என பாதயாத்திரை பொறுப்பாளர்களான எஸ்.ஜெயராஜா எஸ்.நந்தபாலா ஆகியோர் முல்லைத்தீவிலிருந்து தெரிவித்தனர். (R)
31 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago