2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வருடாந்த அலங்கார உற்சவம்

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திறக்கதவு திறத்தல் நிகழ்வுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெறும் தீமிதிப்பு வைபவத்துடன் வருடாந்த உற்சவமானது இனிதே நிறைவுபெறவுள்ளது.

தொடர்ந்து ஐந்து தினங்களாக இடம்பெறவுள்ள உற்சவ நிகழ்வின்போது, மடை பரவுதல் கட்டுச் சொல்லல் அம்மன் எழுந்தருளல் செய்தல் போன்ற கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், ஆலயத்தில் அடியவர்களின் நலன் கருதி அன்னதானம் வழங்குவதற்கு ஆலய பரிபாலன சபையினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .