2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த அலங்கார உற்சவம்

Sudharshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதி ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா, நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை (02) ஆரம்பமான வருடாந்த உற்சவத்தின் நவ நாள் கிரியைகள், உற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ நடராஜசந்திரலிங்கக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச. குகநாத சர்மா, பிரம்மஸ்ரீ கமல் சர்மா, பிரம்மஸ்ரீ கே. எழில்ராஜ சர்மா ஆகியோர் நிகழ்த்தினர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) 7ஆம் நாள் வீதி ஊர்வலமும் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (10) ஆனி உத்தர தினத்தன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X