Freelancer / 2024 ஜூலை 23 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, மயூரா பிளேஸ், மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீயபதி பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும்.
ஹைதராபாத் ரெகோன் சர்வதேச அமைப்பு ஏற்பாட்டில் இலங்கை ஸ்ரீகிருஷ்ணகழகம் நடத்தும் இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்து பூசகர்களும் வருகை தரவுள்ளனர்.
27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7:30 முதல் கோ பூஜை புன்யாகவசனம், சாந்தி ஹோமம், மஹாபூர்னாஹ_தி நடைபெற்று மதியம் 12 மணி வரை கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
நண்பகல் 12 மணி முதல் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4.00 மணி முதல் 7.00 மணிவரை ஸ்ரீநிவாசக் கல்யாணம் நடைபெறும்.
இவ்விழாவில் இலங்கை வாழ் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீமந் நாராயணனின் திருவருளைப் பெற்று பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறோம்.S
6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago