2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு புதிய நிர்வாகம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவில் பரிபாலன சபைக்கு புதிய வண்ணக்குமார் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசமகா சபையின் தீர்மானாத்துக்கமைய இந்த நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதன்படி, புதிய  தலைவராக இ.மேகராசா, செயலாளராக சி.கங்காதரன், பொருளாளராக ச.கோகுலகிருஸ்ணன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் 29ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 11ஆம் திகதி தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து திரு வேட்டை திருவிழாவும் இடம்பெற்று, செம்டெம்பர் 12ஆம் திகதி பெருமானின் தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டுக்கான மகோற்சவம் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .