2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

எண்ணெய்க்காப்பு நிகழ்வு...

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை நொச்சிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக  எண்ணெய்க்காப்பு நிகழ்வு 20 வருடங்களின் பின்னர்   நேற்று (24) இடம் பெற்றது. வவுனியா முறிப்பு பிள்ளையார் கோவில்  பிரதமகுரு சிவஸ்ரீ சிவகுகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

கர்மாரம்பம் இடம்பெற்றதுடன்   கும்பாபிஷேகமும் இடம்பெற்றதாக கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தின் போது நொச்சிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆட்சியின்போது புனர்நிர்மாணிக்கப்பட்டு கிராம மக்களின் நிதி பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு 20 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் இடம்பெற்றுவருவதும்  குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .