2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

சந்தஹிரு சேய தூபியில் நினைவுச் சின்னங்கள் வைப்பு

J.A. George   / 2021 மார்ச் 29 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் நிகழ்வு, அனுராதபுரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நேற்று (28) இடம்பெற்றது.

மகா சங்கத்தினர் மற்றும் நாட்டின் பல பாகங்களில் உள்ள பக்தர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட விலையுயர்ந்த கலைப்பொருட்கள், புனித சின்னங்கள் மற்றும் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பெறுதிவாய்ந்த கல் என்பன இந்த நாற்சதுரத்தில் வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் பின்னணியில் உந்துசக்தியாக செயற்படும், பாதுகாப்பு செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள் தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) புனித நினைவுச்சின்னங்கள் அடங்கிய கலசத்தை தூபியின் நாற்சதுரத்தில் வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார்.

பிரமாண்டமான முறையில் நிர்மானிக்கப்பட்டுவரும் இந்த தூபியினுள் மகா சங்கத்தினரின் அனுஷ்டானங்களின் பின் புனித தாதுக்கள் வைக்கப்பட்டன.

இதேவேளை, பிரபல வர்த்தகர் ஆர்தர் சேனநாயக்கவினால் தூபியின் முகட்டில் வைப்பதற்காக வழங்கப்பட்ட 3 அடி உயரமான சூடாமாணிக்கம் என்றழைக்கப்படும் “இரத்தின கல்”, தனவந்தர்கள் மற்றும் பக்தர்களினால் அளிக்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட கற்கள் மற்றும் தங்கம் ஆகியவை எட்டு புனித ஸ்தலங்களின் பொறுப்பாளரான சிரினிவாச தேரரிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .