2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

தடையில்லா பணவரவுக்கு விளக்கை இப்படி ஏற்றுங்கள்!

Editorial   / 2021 நவம்பர் 16 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். எனக்கு இப்படி எல்லாம் ஆசை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

எல்லோருக்குமே கோடிஸ்வரன் ஆகும் யோகம் உண்டு. அது அவரவர்களின் ஜாதகத்தை பொறுத்து எந்த வயதில்? நீங்கள் என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆக முடியும்? என்பது இருக்கிறது.

ஒரு சிலருக்கு பிறந்த குழந்தை மூலம் கோடீஸ்வர யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு 60 வயதுக்கு மேல் தான் அந்த யோகம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சாகும் வரை கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்றும் இருக்கும்.

இப்படி அவரவர் ஜாதக அமைப்பின்படி கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்றாலும் சிறுசிறு பரிகாரங்களை செய்வதன் மூலமும் இதனை பெறலாம். நாம் அத்தகைய எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஒரு ஜாதகத்தில் அசுர குருவாகிய சுக்கிரனும், தேவகுருவாகிய குருவும் இணையும் பொழுது அவர் கோடீஸ்வர யோகத்தைப் பெறுகிறார். குறிப்பாக, தனுசு ராசியில் சுக்கிரனும், குருவும் இணையும் பொழுது அந்த ஜாதகர் கோடீஸ்வரர் யோகத்தைப் பெறுகிறார். அதே போல கேதுவுடன், குரு பகவான் இணைந்திருக்கும் ஜாதகர் கோடீஸ்வரர் யோகத்தை அடைகிறார். மீன ராசியில் சுக்கிர பகவான் உச்சம் பெறும் பொழுது அந்த ஜாதகர் கோடீஸ்வர யோகம் பெறுகிறார்.

இப்படி கோடீஸ்வர யோகத்தை தரும் ஜாதக அமைப்பை தத்தம் ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் காண்பித்து தான் எந்த வயதில் இந்த யோகத்தை பெறும்படியான அமைப்பு இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படி அல்லாமல் சிறுசிறு பரிகாரங்களை செய்து, இந்த யோகத்தை உடனே அனுபவிக்க செய்யக்கூடிய எளிய ஆன்மீக ரகசிய குறிப்புகளை தான் நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தாயாரை மகிழ்ச்சி அடைய செய்ய நாம் அனுதின வாழ்க்கையில் சமையல் செய்யும் பொழுது தூள் உப்பை காட்டிலும், கல் உப்பை அதிகம் பயன்படுத்த வேண்டும். கல் உப்பில் இருக்கும் மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் வெள்ளிக்கிழமையில் இது போல் தீபம் ஏற்றி வைத்து வரலாம்.

சிறிய அகல் விளக்கு இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு அகல் விளக்கு முழுவதும் கல் உப்பை நிரப்பிக் கொள்ள வேண்டும். இன்னொரு அகல் விளக்கு முழுவதும் சுத்தமான நெய் நிரப்பி கொள்ள வேண்டும்.

உப்பையும், நெய்யையும் அருகருகே வைத்து நெய் தீபத்தை பஞ்சு திரி இட்டு ஏற்றி மகாலட்சுமியின் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நாம் செய்து வர கோடீஸ்வர யோகத்தை விரைவாக அடையலாம்.

மகாலட்சுமி மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி

மகாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா!

மேலும், இந்த உப்பை நீங்கள் ஓடும் தண்ணீரில் போட்டு விட வேண்டும். கடல், நதி, ஏரி போன்ற ஏதாவது ஒரு இடத்தில் இதனை போட்டு விட்டு வர வேண்டும். நீங்கள் உப்பை இப்படி போடும் பொழுது வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆக இருக்கக் கூடாது, மேலும் மாலை 6 மணிக்கு மேல் வெளியில் இப்படி கொட்ட கூடாது. தண்ணீரில் போட முடியாதவர்கள் ஏதாவது ஒரு மரத்திற்கு அடியில் கொட்டி தண்ணீரை ஊற்றி விடுங்கள்.

இது ஒரு எளிய பரிகாரமாக தோன்றினாலும், நமக்கு மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். எனவே, நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X