2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

டயமக வெஸ்ட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், இன்று(3) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி 1ஆம் திகதி கணபதி வழிபாடுகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் கும்பாபிஷேகம் ஆரம்பமாகியது.

இன்றைய (2) தினம் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன்,  நாளைய(3) தினம் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

கும்பாபிஷேகப் பூஜைகள், பிரதான குரு குமரகுமணி சர்வ வித்தியாபதி இளங்கலா ஜோதிட சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X