2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஆடி வேல் விழா ஆரம்பம்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

( சகா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா  உற்சவம் ஆடி மாதம் 29  ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 13 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று, ஆகஸ்ட் 11-ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சுதநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு தற்பொழுது நீர்ப்பாசன திணைக்களம் சிவதொண்டன் அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஆலய வளாகத்தில்  சிரமதானத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விரைவில் உற்சவத்திற்கான ஆலய பரிபாலன சபை கூட்டம் நடைபெறவிருப்பதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .