Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று பங்குனி திங்களின் இறுதி திங்கள் பூஜைகள் மற்றும் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவில் கொட்டும் வெயிலுக்கு மத்தியிலும் அதிகளவிலான பக்தர்கள் ஆலயத்தில் கூடியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
வருடா வருடம் அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த வருடம் ஆலயத்தில் பாரிய அளவில் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் பூஜைகளிலும் மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதிலும் மக்கள் முண்டியடிப்பதை காண முடிந்தது.
ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டு கட்டுமான வேலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக வருடா வருடம் இடம்பெறும் மஞ்சம் இழுக்கும் நிகழ்வு இந்த வருடம் இடம்பெற மாட்டாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர் அத்தோடு ஆலய பொங்கல் வழமைபோன்று பாரியளவில் இடம்பெறாது எனவும் பொங்கல் விழா நடைபெறுமெனவும் வருகிற வருடம் பங்குனி மாதம் கும்பாபிசேகம் செய்ய எண்னுவதாகவும் ஆலய பூசகர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
18 minute ago
22 minute ago