2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 190ஆவது வருடாந்த கொடியேற்ற விழா

Super User   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 190ஆவது வருடாந்த கொடியேற்ற விழா இன்று திங்கட்கிழமை மாலை ஆரம்பமானது.

இஸ்லாமிய பெரியார் கண்ணியத்திக்குரிய நாகூர் சாஹு ல் ஹமித் வலியுல்லாவின் நினைவாக வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வின் ஆரம்பம் நிகழ்வு இன்று அஸர் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது.

கல்முனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கொடியை கடற்கரை பள்ளிவாசலிலுள்ள மனவராக்களில் ஏற்றப்பட்டு விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

கல்முனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தினமும் மௌலுத் ஓதல், மார்க்க உபதேசம், றிபாய் ரத்திப் மற்றும் அன்னதானம் போன்றன இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இறுதி நாளான எதிர்வரும் மே 5ஆம் திகதி சனிக்கிமை கொடி இறக்கப்படுவதுடன் கந்நூரி வைபவமும் இடம்பெறவுள்ளது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X