2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

யாழ். செல்வச்சந்நிதி கோவில் கொடியேற்றம் ஓகஸ்ட் 7இல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். தொண்டமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத் திருவிழாவுடன் விஜய வருட மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய பிரதமகுரு தர்மரத்தின ஜயர் தெரிவித்தார்.

20.08.2013 செவ்வாய்க்கிழமை  தேர்த்திருவிழாவும், 21.08.2013 புதன்கிழமை தீர்த்தோற்சவமும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் 22.08.2013 பூங்காவனத்  திருவிழாவும் நடைபெறவுள்ளது.

திருவிழாவின்போது அபிண்ஷகம், அர்ச்சனை, காவடி, பாற்செம்பு, சண்முக ஆராதனை, அன்னதானம், திருமணம், பால்பருக்குதல் மற்றும் ஆலய நேர்த்திகளுக்கு ஆலய பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய பிரதமகுரு கேட்டுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X