2025 மே 22, வியாழக்கிழமை

முருகேசு மாமஹரிஷியின் 77ஆவது ஜயந்தி விழாவும் 3ஆம் வருட குரு பூஜையும்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

ஸ்ரீ முருகேசு மஹரிசிகளின் 77ஆவது ஜயந்தி விழாவும் மூன்றாம் வருட குரு பூஜையும் இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்தில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இன்றைய தினம் காலை 5.00 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி சங்காபிசேகம், குரு திருவுருவச்சிலை ஊர்வலம், குரு பூஜை, விசேட அலங்கார பூஜை, பிரார்த்தனை, அருளுபதேசம், பஜனை, அறநெறி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகேஸ்வர பூஜை என்பன நடைபெற்றன.

காயத்திரி பீடத்தில் பூஜைகள் நடைபெறுவதையும் முருகேசு சுவாமிகளின் திருவுருவ சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுவதையும், இன்றை பூஜைகளில் கலந்து கொண்டவர்களையும், யாகம் வளர்க்கப்படுவதையும், 108 லிங்கம் வைக்கப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X