Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 26 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு பத்தாம் திருவிழாவாகிய மஞ்சத் திருவிழாவும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு 17ஆம் திருவிழாவாகிய கார்த்திகைத் திருவிழாவும், அடுத்த மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு 20ஆம் திருவிழாவாகிய சந்தான கோபாலர் உற்சவமும், மாலை 5.00 மணிக்கு கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து 4ஆம் திகதி சனிக்கிழமை 21ஆம் திருவிழாவாக காலை 7.00 மணிக்கு கஜவல்லி - மஹவல்லி உற்சவமும், மாலை 5.00 மணிக்கு வேல் விமானமும், 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தண்டாயுத பாணி உற்சவமும், மாலை 5.00 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும் (குதிரை வாகனம்) நடைபெறவுள்ளன.
6ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு 23ஆம் திருவிழாவில் சப்பரத் திருவிழாவும், 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு 24ஆம் திருவிழாவாகிய தேர் திருவிழாவும், 8ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு 25ஆம் திருவிழாவாகிய தீர்த்தோற்சவமும், 9ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5. 00 மணிக்கு பூங்காவனமும் இடம்பெறவுள்ளதுடன் அடுத்தநாள் மாலை வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளது.
இவ்விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபடுகின்றனர்.
அதிக எண்ணிக்கையான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் தென்னிலங்கை மற்றும் மேலைத் தேசங்களில் இருந்து வருகை தந்துள்ளவர்களும் ஆலயத்திற்குச் சமுகமளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வழமைபோன்று ஆலய சுற்றாடலில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் யாழ். மாநகர சபை அலுவலகம் மற்றும் சுகாதாரப் பணிமனை என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலய சுற்றாடலில் கடந்த காலங்களைவிட அதிக எண்ணிக்கையான வர்த்தக நிலையங்கள் குறிப்பாக, தென்னிலங்கை வர்த்தக நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான இடங்கள் ஏற்கெனவே யாழ். மாநகர சபையால் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தனியார்களும் தமது காணிகளில் இடங்களை வழங்கியுள்ளனர். Pix: Kushan Pathiraja
diva Monday, 16 August 2010 06:03 AM
ஓம் சரவணபவ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
22 May 2025