Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீபத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் சத்தியமான பொன்னு 18ஆம் படி ஐயப்ப சுவாமிக்கு ஆனந்தமிகு பஜனைகளும், திருவருள் பூஜைகளும் குரு ஆசிகுளம் வேண்டி விநாயகர் வழிபாட்டுடன் கணபதி ஓமம், சக்திபூஜை மற்றும் பஜனை என்பன நேற்று சிறப்பாக இடம்பெற்றன.
ஆலயத்திற்கு வருகைதந்திருந்த குருசாமிகள் அழைத்துவரப்பட்டு, பூஜை ஆராதனைகள் இடம்பெற்ற பின்னர் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. அகில இலங்கை புகழ் சங்கீத பூசனம் சாகித்ய கலாபூசனம் லயஞான தவில் வித்துவான் வி.எம்.பாலசுப்பிரமணியத்தின் ஆசியுடன் சகல மத ஐயப்ப யாத்திரைக் குழு 18ஆம் படி 20ஆவது வருடம் குரு பீடாதிபதி எஸ்.புனிதாபரன் குருசாமி ஆகியோருடன் ஐயப்ப பக்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய பூசகர்கள் மற்றும் ஆலய ஆறங்காவலர்கள் மேற்படி பூஜை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
6 hours ago