2025 மே 21, புதன்கிழமை

கூட்டுப் பிரார்த்தனை...

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களின் சீற்றம் தணிவதற்காக 210 வாரங்களுக்கு தொடர் யாகம் செய்யப்பட்டு வருகிறது. தெஹிவளை - பீற்றர்ஸ் வீதியில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பாபாஜி பீடத்தில் அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் ஆசியுடன் ராதா மாதாஜியின் ஏற்பாட்டில் மேற்படி யாகம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 10ஆவது வார யாகபூஜை நடைபெற்றது. இந்த யாகத்தினை நடத்தி வைப்பதற்காக இந்தியாவின் பிரம்மரிஷி மலைவாழ் அன்னைச் சித்தர் ஸ்ரீ ஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள் வருகை தந்திருந்தார். அன்னைச் சித்தரின் தலைமையில் கடற்கரையில் மகா யாகம் நடைபெறுவதையும் கலந்துகொண்ட மெய்யன்பர்களையும் படங்களில் காணலாம்.

இன்னும் 200 வாரங்களுக்கு தொடர்ந்து இவ்யாகபூஜை நடைபெறவுள்ளது. இந்த யாகத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாபாஜி பீடத்தில் ஒன்றுகூடுமாறு வேண்டப்படுகிறீர்கள். இவ்யாகபூஜை தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள ராதா மாதாஜியை 0094 757846102 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .