2025 மே 21, புதன்கிழமை

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலய ரத பவனி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியிலும் மிக விமர்சையாக நடைபெற்றது. காலையில் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜையும் யாகபூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்பாள் தேரில் ஆரோகணம் செய்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

பல இடங்களிலிருந்தும் காவடிகள், தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் எடுத்து வரப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பெண்கள் பால்குடம் மற்றும் கரகம் எடுத்தும் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மூன்று அழகிய தேர்களில் பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வயானை சகிதமும் நாகபூசணி அம்பாள் தேர்களில் பவனி வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .