2025 மே 21, புதன்கிழமை

பக்த யாத்திரை...

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியாவின் நாக்பூரிலுள்ள ஸ்ரீ சத்குரு சீத்தநம்டாஸ்ஜி பாபா சேவா சமித்தி அமைப்பின் பக்கதர்கள் 150 பேர் நேற்று திங்கட்கிழமை நுவரெலியா சீதைஅம்மன் கோவிலுக்கு விஜயம் செய்தனர். பரம்பூஜ்ஜ சன்ட்சஸ்னி அல்கஸ்ரிஜி மாதாஜியின் வழிகாட்டலில் இந்த பக்தர்கள் இலங்கைக்கு வருகைதந்திருந்தனர். இராமாயணத்தில் சுந்தரகாண்டத்தோடு தொடர்புபட்ட இடமாகக் கருதப்படும் சீத்தாஎலிய கோயிலில் இந்த பக்தர்கள் பஜனை வழிபாடுகளில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான இந்த வடஇந்திய இராம பக்தர்களுடன் இஸ்ரேல், ஜேர்மன், பிரான்ஸ் நாட்டு அடியார்கள் சிலரும் கலந்து பஜனையில் பங்குபற்றியமை சிறப்பானதாகும்.

இந்த நிகழ்வில் சீதாஎலிய சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டதோடு வடஇந்திய பக்தர்களின் பஜனை நிகழ்விலும் மகிழ்வோடு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .