2025 மே 21, புதன்கிழமை

ஊர்வலமாக பொங்கல் பொருட்கள் எடுத்துச் செல்லும் வைபவம்

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மல்லாகம்,  கலட்டி சாடியடி பெரியதம்பிரான் ஆலயத்திலிருந்து மல்லாகம் நரியிட்டான் பகுதியிலுள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் பொங்குவதற்கான பொங்கல் பானை உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அடியவர்களினால் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வைபவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இப்பொங்கல் விழாவில்  யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டனர். பறை முழங்க  பொங்கல் பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பெண்கள் கற்பூரச்சட்டி எடுத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .