Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 18 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். தெல்லிப்பளை கருகம்பானை கவுனாவத்தை வைரவர் கோவில்ப் பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கோவில் முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
30 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றினர்.
யாழ். மாவட்டத்தில் வேள்வி நடைபெறும் இந்துக் கோவில்களில் கவுனாவத்தை கோவில் மிகவும் சிறந்து விளங்கிறது. இந்த வேள்வியின்போது சுமார் 750க்கும் மேற்பட்ட கடாய்கள் பலியிடப்பட்டன.
கடந்த காலங்களில் கருகம்பானை கவுனாவத்தை கோவில் வளாகம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்தது. இதன் காரணமாக கோவில் உற்சவ தினத்தன்று கோவில் தர்மகர்த்தாக்கள், இராணுவத்தினரிடம் அனுமதி பெற்று கோவிலுக்கு சென்று ஒரு கடாவை மாத்திரம் பலி கொடுத்துவிட்டு ஏனைய கடாக்களை கோவிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள காணியொன்றில் பலியிட்டு வந்தனர்.
ஆனால் இந்தமுறை கோவில் வெளிமண்டபத்தில் மாமிச உணவுகள் பொங்கிப் படைக்கப்பட்டது. கடாய்களும் பலியிட்டு படைக்கப்பட்டது. கோவில் உள்மண்டபத்தில் சக்கரை மற்றும் வெண் பொங்கல்கள் பொங்கியும் முக்கனிகள், முறுக்கு, பால்றொட்டி, வடை என்பன படைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
41 minute ago