Menaka Mookandi / 2011 ஜூலை 08 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் விசேட அம்சங்களில் ஒன்றான தீர்த்தோற்சவ நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை பெரிய நீலாவணை கடற்கரையில் இடம்பெற்றது.
துறைநீலாவணையிலிருந்து அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரையில் விசேட பூசைகள் நடைபெற்ற பின்னர் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அம்மன், பெரிய நீலாவணை விஷ்ணு கோவில் மற்றும் பெரிய தம்பிரான் கோவில் ஆகியவற்றில் தரித்ததோடு அங்கும் பூசைகள் இடம்பெற்றன.
கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்த துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Jan 2026