Super User / 2011 ஜூலை 21 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார், ரி.லோஹித், ஜிப்ரான்)
ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை மகோற்ஷபம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்ப அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தப்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.
சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டதுடன் கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்துக்கு அபிNஷகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்றது. இதன்போது கொடியேற்ற பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன. உற்சவங்கள் யாவும் ஆகம கிரியா மதுர கலாவித்தகர் பிரம்மஸ்ரீ நாராயண சண்முகநாதன் குருக்களினால் நடாத்தப்படுகின்றது.
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026