Menaka Mookandi / 2011 ஜூலை 24 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.சித்திரத்தேர்த் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி காலை நடைபெறும். பாபநாசத் தீர்த்தக்கிணற்றில் ஆகஸ்ட் 2ஆம் திகதி காலை தீர்த்தோற்சவத் திருவிழா நடைபெறும்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து தேர்த்திருவிழா நடைபெறும் தினம் வரை தினமும் காலையும் மாலையும் அபிஷேகம், பூஜை வழிபாடுகளும் அம்பாள் வெளிவீதி உலாவும் நடைபெறும். ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வர லிங்கேஸ்வரக் குருக்கள் பிரம்மோற்சவ குருவாக இருந்து கொடியேற்ற நிகழ்வை நடத்தி வைப்பதை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026