2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் சங்காபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை விசேட யாக பூஜையுடன் சங்காபிஷேகம் ஆரம்பமானது. சங்குகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், அடையலிலுள்ள அன்னைக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கும்பம், சங்கு என்பன ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பரிபால மூர்த்தியாகிய விநாயகப்பெருமானுக்கு சங்காபிஷேஷகம் செய்யப்பட்டு மூலமூர்த்தியாகவுள்ள ஸ்ரீவடபத்திரகாளியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றதுடன்,  வைரவருக்கு நடைபெற்ற பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு சங்காபிஷேகம் இனிது நிறைவுபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X