Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆடிப்பூர பெருவிழாவினை முன்னிட்டு பாற்குட பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக இடம்பெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பமானதுடன் பாற்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் யாகபூசை இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பாற்குட பவனி தாங்கிவந்த அடியார்கள் தங்களின் கைகளினால் ஸ்ரீ வடபத்திரகாளியம்மனுக்கு அபிண்ஷகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மூல மூர்த்திக்கு அபிசேக ஆராதனை இடம்பெற்றதுடன் சிறப்பு பூசைகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025