2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டி களுவாஞ்சிக்குடியில் மகாயாகம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

உலகிலுள்ள மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டி மட்டக்களப்பு,  களுவாஞ்சிக்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் உலக ஷேம மகாயாகம் மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிக்குடியிலுள்ள ஸ்ரீயோகா ஞானபீடத்தில் ஸ்ரீசற்குரு புண்ணியரத்தினம் தலைமையில் இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது.
 
தற்போது தோன்றியுள்ள அமைதியின்மை, அச்சம், பீதி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு சாந்தி, சமாதானத்துடன் சந்தோஷமாக வாழ சித்தர் மகாரிஷகளின் ஆசி வேண்டி இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது சகல சித்தர்களையும் வேண்டி ஆகுதிகள் வழங்க யாக பூசையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X