2025 மே 21, புதன்கிழமை

திருமலை லக்ஷ்மி நாராயணர் ஆலய எண்ணெய்க் காப்பு கிரியை

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், எஸ்.எஸ்.குமார்,வி.ரி.சகாதேவராஜா)

திருகோணமலை, நிலாவெளி வீதி, ஆறாம் கட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்ஷ்மி நாராயணர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தின் மூர்த்திகளுக்கு எண்ணெய்க் காப்புச்சாத்தும் கிரியையில் ஆயிரக்கணக்கான அடியார்கள் வரிசையில் நின்று எண்ணெய்க்காப்பு செலுத்தினர்.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை காலை கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சுமார் ஆறரை ஏக்கர் காணியில் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பிரமாண்டமான ஆலயத்தின் விஸ்தீரணம் 24,600 சதுர அடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X