2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு, ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
இலங்கையின் சின்னக் கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பல்வேறு பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான இக்கொடியேற்ற நிகழ்வில், ஈசான தேசிகர் சிவத்திரு வே.கு.நாகராசா குருக்கள் வருடாந்த மகோற்சவக் கொடியை ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து சுவாமி ஆலய உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.  

தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெறும் இவ்வருடாந்த உற்சவத்தில்,  தினமும் கம்ப பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி, வெளி வீதி வலம் வருதல், கூட்டு பிரார்த்தணைகள் என்பன இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X