2025 மே 21, புதன்கிழமை

மில்லாகந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குடமுழுக்கு பெருவிழா

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களுத்துறை மாவட்டத்துக்குட்பட்ட புலத்சிங்கள, மில்லாகந்த புதிய டிவிசன் (திப்பட்டா) அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் மண்டப ஆராதனைகள் ஆரம்பித்து, விசேட ஹோமம், பூர்ணாகுதி, விசேட தீபாராதனை, அந்தர் பலி, பசீர் பலி, யாத்ரா தானத்துடன் கும்பம் வீதி உலா வந்து காலை 11.45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து மதுவர்க்கம், மகாநிவேதனம், அகண்டதீபம், தசமங்கள தரிசனம், யாக உத்வாசம், எஜமான் அபிஷேகம், அர்ச்சனைகளுடன் மகேஸ்வர பூஜையும் இடம்பெற்றது.  

கும்பாபிஷேக கிரியைகள், வரக்காபொல, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய ஸ்தாபகர் சக்திதாசன், பிரம்மஸ்ரீ பால்சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்த மஹா கும்பாபிஷேகத்தையடுத்து 12 தினங்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 13ஆம் நாள் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றான கரகம் பாலித்தல் முறையைப் பின்பற்றி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. முறையற்ற விதத்தில் அமைந்துள்ள ஆலயத்தை முறையாக மாற்றியமைத்து விக்கிரகங்கள் வைத்து வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் கருதி, இவ்வாலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Samantha Perera


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X