2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

Kogilavani   / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே,எஸ்.வதனகுமார்)
வரலாற்று சிறப்பு மிக்க யாத்திரை தலமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையிலான திருவிழாத் திருப்பலியுடன் நிறைவு பெற்றது.

திருப்பலியை முன்னிட்டு சனிக்கிழமை காலை மட்டக்களப்பு கிருஸ்தவ சமூகம் ஏற்பாடு செய்திருந்த யாத்திரை மட்டக்களப்பு மரியாள் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுணதீவு  ஊடாகச் சென்று பிற்பகல் 2 மணியளவில் ஆலயத்தைச் சென்றடைந்தது.

இவ் ஆலய திருவிழாவிற்கு கொழும்பு, நீர்கொழும்பு உட்பட பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X