2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

கல் நந்தி எழுந்த புல்லுண்டு சாணமிட்டு வெள்ளையர்களை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப் பெருமை மிக்க கிழக்கிலே தேரோடும் ஆலயமான கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா !அரோகரா! பக்தி ஆரவாரத்தின் மத்தியில் இடம்பெற்றது.

வெள்ளையர்களால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் ஆலயத்தையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் ஆலயத்தை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

இவ் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 09ஆம் திகதி முதல் குடிமக்களின் திருவிழாக்கள் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக இடம்பெற்று வந்தது. 09ஆம் திகதி பொன்னாச்சிகுடி மக்களின் திருவிழாவும், 10ஆம் திகதி வேடகுடி மக்களின் திருவிழாவும், 11ஆம் திகதி சட்டிகுடி மக்களின் திருவிழாவும், 12ஆம் திகதி பெத்தாங்குடி மக்களின் திருவிழாவும், 13ஆம் திகதி  கோப்பிகுடி மக்களின் திருவிழாவும், 14ஆம் திகதி கச்சிலாகுடி மக்களின் திருவிழாவும், 15ஆம் திகதி படையாட்சிகுடி மக்களின் திருவிழாவும், 16ஆம் திகதி கலிங்ககுடித் திருவிழாவும், 17ஆம் திகதி உலகிப்போடிகுடி மக்களின் திருவிழாவும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

18ஆம் திகதி நேற்று மாலை விசேட பூசையினைத் தொடர்ந்து தான்தோறீஸ்வரப் பெருமானும் விநாயகப் பெருமானும் பக்தர்களின் அரோகரா!அரோகரா! என்ற பக்தி ஆரவாரத்தின் மத்தியில் வெளிவீதி வந்து தான்தோறீஸ்வரர் சித்திரத் தேரிலும் விநாயகப் பெருமான் விநாயகர்தேரிலும் ஏற பக்தர்கள் வடம்பிடிக்க மணல் வீதியில் ஆடி அசைந்து பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் ஆலயத்தைச் சுற்றி இடம்பெற்ற தேரோட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.


 


  Comments - 0

  • tivaan Monday, 19 September 2011 02:15 PM

    ஊர் சேர்ந்து தேர் இழுத்து, ஒற்றுமையை நிலைநிறுத்தி கெட்ட எண்ணம் கொண்டவரை ஓட்டிடுவீர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X