2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தைப்பூச வழிபாடு வாழ்வில் ஒளி வீசும்

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் போன்று தைப்பூசத்திருநாளும் கந்த கடவுளான முருகப்பெருமானுக்கு உரித்தானது. அன்னை பார்வதி தேவியிடம் சக்தி வேல் பெற்றது  இந்நன்னாளில் தான். தைப்பூசம் பௌர்ணமி தினத்தன்று தை மாதத்தில் முருகப்பெருமானின் nஐன்ம நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஆகும்;. தைப்பூசம் தேர் திருவிழாவானது 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். புனர் பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி பூச நட்சத்திரத்தில் முருகப்பெருமான் - வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார். முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் திருநாள் ஆகும். கந்த கடவுள் - வள்ளி குறத்தியை மணம் முடித்ததும் இந்நாளில் தான். வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் திருமண கோலத்தில் தேரில் மக்களுக்கு அருள்பாளிக்கும் இந்திருநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேர் திருவிழவாக கொண்டாடப்படும் இந்நாள், முருக கடவுளுக்கே சிறப்பான நாள் ஆகும்.

தேர் திருவிழாவை கலசத்துடன் காண்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். நமது வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கும். முருகப்பெருமான், வள்ளி - தெய்வானையுடன் திருமண கோலத்தில் காண்பதால் திருமண தடை நீங்கும். முருகப்பெருமானை குழந்தை வடிவத்தில் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

கந்தக்கடவுளின் வாகனமான சூரப்பத்மன் மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்து முருகப்பெருமானின் அருள் பெற்றதும் இந்நாளில் தான்.

திருமயிலை ஸ்தலத்தில் அருள்பாலிக்கும் சிவனருளால் திருஞானசம்பந்தன் பதிகம்பாடி பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அவளை உயிர்பெற செய்து இந்த அற்புதத்தை நிகழ்;;த்திய தினம் தைப்பூசம் என்கிறது ஞான நூல்கள்.

சிவனும் பார்வதி தேவியும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ருத்ர தாண்டவம் ஆடும் போது சிவனிடமும் பார்வதி தேவியிடமும் வரங்களை கந்த கடவுள் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே தைப்பூச திருநாள் அன்று முருகப்பெருமானை வழிபட்டால் வினைகள் அனைத்தும் நீங்கும்.

மயிலந்தன் மாமலை வாழ்வே... என திருப்புகழ் வழிநின்று மயில் முருகப்பெருமானை தைப்பூச திருநாள் அன்று வழிபட அல்லல்கள் நீங்கும்...! ஆனந்தம் பெருகும்..!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X