2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தைப்பூச விசேட பூஜை வழிபாடுகள்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 07 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ, ரி.லோஹித்)

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஹட்டன் சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலாவும் இடம்பெற்றது. தைப்பூசத்திருவிழா நேற்று திங்கட்கிழமை பால்குட பவணியுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தைப்பூசத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம், இன்று செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் கடற்கரையில் இடம்பெற்றது. பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் ஆலயத்தில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றுவந்ததுடன் சுவாமி உள்வீதி வெளிவீதி திரு உலாவும் இடம்பெற்றது.

நேற்று இரவு சப்பரத்திருவிழா இடம்பெற்று இன்று ஆலயத்தில் திருச்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று வசந்த மண்டப விசேட பூசை இடம்பெற்றது. அதனையடுத்து தீர்த்த உற்சவத்துக்காக சுவாமி ஊர்வலமாக பிரதான வீதியூடாக கல்லடி திருச்செந்தூர் கடற்கரை சென்று விசேட பூசைகளையடுத்து தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

உற்சவ நிகழ்வுகளும் விசேட பூஜைகளும் தெஹிவளை ஆதிநகர் சாயி விஸ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ லக்ஸ்மிகாந்த ஜெகதீஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹட்டன் சிவசுப்பிரமணிய ஆலயம்

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X