Kogilavani / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
வரலாற்று பெருமைமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் விக்கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்ட புனித கிணறு புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
கி.பி. 1624ஆம் வருடம் போர்ததுக்கீசர் இலங்கையை கைப்பற்றியபோது திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அழித்தனர். அப்போது அங்கு இருந்த பக்தர்களில் சிலர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்களை பாதுகாக்க பெரிதும் சிரமமப்பட்டனர். சிலர் ஆலயத்தின் மூல விக்கிரகத்தை வடகரை வீதியில் உள்ள வீரநகர் என்னும் இடத்தில் மண்ணில் புதைத்து பாதுகாத்தனர். இது பின்னர் திருகோணமலை நகர சபையினரால் பொது மக்கள் தேவைகருதி பொதுக்கிணறு ஒன்று அமைக்க முற்பட்ட போது மண்ணில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் இது இலங்கை முழுதும்; பொதுமக்களது பார்வைக்காக வைக்கப்பட்டு மீண்டும் ஆலயத்தில் பிரதிஷ்டைசெய்யபட்டது.
அந்த விக்கிரகங்கள் இருந்த கிணறு தற்போது மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு பரிபாலன சபையினரால் புனித கிணறாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு கோணேச பெருமான் மாதுமை அம்பாள் சகிதம் அமர்ந்திருக்கும் திருக்காட்சி விக்கிரகமும் அமைக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago