2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜோசப்வாஸ் அடிகளாருக்கு புதிய ஆலயம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜிப்ரான்)

கத்தோலிக்க திருச்சபையின் இலங்கையின் தூதுவர் அருளாளர் ஜோசப்வாஸ் அடிகளாரின் 300ஆவது விண்ணக பிறப்பு விழாவின் நிறைவையொட்டி மட்டக்களப்பு, தன்னாமுனை விபுலானந்தபுரத்தில் அருளாளருக்கென ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தினை திருமலை மட்டுநகர் மறைமாநில ஆயர் கலாநிதி. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, துணை ஆயர். கலாநிதி.பொன்னையா ஜோசப், மறைமாவட்ட நிதிப் பொறுப்பாளர் அருட்பணி. பேராசிரியர். த.தரன் சில்வெஸ்ரர் மற்றும் குருக்கள் ஆகியோர் இணைந்து இவ்வாலயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆலய நிர்மாணிப்பு நிதியுதவிகளைக் கொண்டு பங்குத்தந்தை, பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும், நிதிப் பொறுப்பாளர் அருட்பணி. பேராசிரியர். த.தரன் சில்வெஸ்ரர் அவர்களின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .