2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

கோணேஸ்வர பெருமானின் நகர் வலம் ஆரம்பம்

Super User   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், கஜன்)

மகா சிவராத்திரியை தொடர்ந்து திருகோணமலையில் பிரெட்ரிக் கோட்டையினுள் அமர்ந்துள்ள கோணேஸ்வர பெருமான் மாதுமை அம்பாள் சமேதரராக ஐந்து நாள் திருகோணமலை நகர் வலம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

பிரெட்ரிக் கோட்டைக்குள் கோணேசர் கோயிலிலிருந்து புறப்பட்டு கோட்டை வாயிலின் ஊடாக நகருக்குள் கோணேஸ்வர பெருமான் பிரவேசித்து நகர் வலம் வந்தார்.

கோணேஸ்வர பெருமான் முதல் நாள் பாலையூற்று முருகன் ஆலயத்திலும் இரண்டாம் நாள் உவர்மலை துர்க்கை அம்மன் ஆலயத்திலும் மூன்றாம் நாள் சிவன் கோயிலிலும் நான்காம் நாள் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் தங்கியிருந்து ஐந்தாம் நாள் மீண்டும் கோணேசர் கோயிலை சென்றடைவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X