2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருநீற்றுப் புதன் தவக்கால வழிபாடுகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

இயேசு கிறிஸ்த்து மீண்டும் உயிர்த்தெழுவதை கொண்டாடுமுகமாக கிருஸ்தவ மக்கள் இன்று புதன்கிழமை திருநீற்றுப்புதன் தவக்காலத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருநீற்றுப்புதன் தவக்கால வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன.

ஆலய பங்குத்தந்தை ஜே.ஏ.ஜி. ரெட்னகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு-திருமலை ஆயர் கலாநிதி கிங்கஸ்லி சுவாம்பிள்ளை பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழிபாடுகளை ஆரம்பித்துவைத்தார்.
இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

40 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த தவக்கால வழிபாடுகளில் தினமும் ஆலயத்தில் தவக்கால திருப்பலி பூசைகள் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • rajeev Thursday, 23 February 2012 01:59 AM

    nanrigal kodi ungalukku......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X