2025 ஜூலை 05, சனிக்கிழமை

தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2012 மார்ச் 18 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய சங்காபிசேகமும், பால்குட பவனியும் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
 
பால்குட பவனி காலை 9 மணிக்கு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மத்திய வீதி, திருமலை வீதியூடாக, ஆலயத்தை வந்தடைந்தது.
 
பால்குட பவனியை அடுத்து, பாலாபிசேகமும், 108 கலச சங்காபிசேகமும் நடைபெற்றது.

யாழ் உடுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய பிரதம குரு சிவாகம கிரியா கலாநிதி, சிவாகம வித்தகர் சிவஸ்ரீ இ.பாலகிருஸ்ணக் குரு, களுவாஞ்சிக்குடி பிள்ளையார் கோவில் பிரதம குரு ஆபியபாஷா விற்பன்னர் ஜாதக திலகம்  சிவஸ்ரீ சண்முக மயூரவதன சர்மாவும், பெரிய ஊறணி சந்திப்;பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ச.சிவபாத சுந்தரம், மட்டக்களப்பு சிந்தாணமிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி.சிவஞான சம்பந்தன், யாழ் நகர் முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.பிரசாந் குருக்கள் ஆகியோர் கிரியைகளை நிகழ்த்தினர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .