2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மகிழவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பால்குட பவனியும் அலங்கார திருவிழாவும்

Super User   / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு. வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட சுமார் 200 வருடங்கள் பழைவாய்ந்த மகிழவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பால்குட பவனியும் வருடாந்த அலங்கார திருவிழாவும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

மகிழவட்டவான் நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று பாற்குட பவனியானது ஆரம்பமானது.
பாற்குட பவனியானது மகிழவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் பாலாபிசேகம் செய்யப்பட்டது.

பின்னர் அங்கு யாக பூசை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூசைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ள ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. உற்சவங்கள் யாவும் சிவ ஸ்ரீ சபாரத்தின குருக்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X