2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

தேற்றாத்தீவு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தீ மிதிப்புடன் நிறைவு

Super User   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை இடம்பெற்று தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்றன.
கிழக்கிலங்கையின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற  இந்த உற்சவத்தில் வீரகம்பம் வெட்டுதல், அம்பால் ஊர் காவல் பண்ணல், நோர்ப்பு கட்டுதல் ஆகிய சடங்குகள் சிறப்பு பெற்றன.

ஆலயத்தில் நேற்று நவ சக்தியாகம் இடம்பெற்றதுடன் நோர்ப்பு நெல் குற்றுதல், நோர்ப்பு கட்டுதல் ஆகிய சடங்குகள் கோலாகலமாக இடம்பெற்றன. இன்று புதன்கிழமை அதிகாலை விசேட அலங்கார பூசை இடம்பெற்றதுடன் சுவாமி வீதி உலா சென்று கடற்குளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அடியார்களின் பெரும் பக்தி பூர்வமான நிகழ்வான தீ மிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. இந்த தீ மிதிப்பு உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X